மதுரை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கறிக்கோழி வளர்ப்பவர்கள் சுமார் 300க்கும் மேற்பட்ட பண்ணைகள் அமைத்து கறிக்கோழி குஞ்சுகளை வாங்கி வளர்த்து அதன் மூலம் தங்களது வாழ்க்கை தரத்தை உயர்த்தி வந்தனர். தற்போது விலைவாசி உயர்வால் கறிக்கோழி பண்ணையாளர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகும் நிலையில் இருப்பதாக மதுரையின் பல்வேறு பகுதிகளில் கறிக்கோழி வளர்ப்பவர்கள் வேதனையை தெரிவிக்கின்றனர். அரசு மானியம் வழங்கிய தங்களது வாழ்வாதாரத்தை உயர்த்த வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

இது குறித்து பண்ணை உரிமையாளர்கள் சங்க ஒருங்கிணைப்பாளர் பால்பாண்டி கூறும் போது,
மதுரை மாவட்டத்தில் 300 கோழிப்பண்ணைகள் உள்ளது ஆனால் தற்போது எங்களின் வாழ்வாதாரம் மிகவும் நஷ்டத்தில் உள்ளது. அதாவது இடுபொருள் கோழிப்பண்ணைக்கு தேவையான இடுபொருள் நாளுக்கு நாள் விலைவாசி கூடிக்கொண்டே போகிறது 5000 கோழிக்கு ரூபாய் 5000 விற்ற மஞ்சு என்ற தென்னை நார் தற்போது 26 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படுகிறது. பத்தாயிரம் கோழி வளர்க்கும் இடத்தில் 36 ஆயிரம் ரூபாய்க்கு மஞ்சு வாங்க வேண்டிய நிலை உள்ளது.
ஒரு கரிமுடை 500க்கு விற்றது இன்றைக்கு 2500 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அவ்வாறு பணம் கொடுத்தும் கரிமுடை கிடைப்பதில் சிரமம் உள்ளது அதாவது டிமாண்ட் அதிகமாக உள்ளது. இது போக மின் கட்டணமும் மிக அதிகமாக உள்ளது நாளுக்கு நாள் அதிகரித்தே வருகிறது விலைவாசி ஏற்றம் தொழிலாளி சம்பளம் என்ன அதிக அளவில் முதலீடு தேவைப்படுவதால் இந்த தொழில் சரிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.
எங்களுக்கு கிடைக்கும் வளர்ப்பு கூலி வெறும் 6 ரூபாய் 50 பைசா இந்த தொகையில் எங்களால் கறிக்கோழி குஞ்சுகளை வாங்கி வளர்த்து உற்பத்தியாளர்க்கு வழங்க முடியவில்லை. ஆகையால் ஒரு கறிக்கோழி வளர்க்க வழங்கப்படும் ஆறு அம்பது ரூபாயை மூன்று ரூபாய் உயர்த்தி ஒன்பது ரூபாய் ஆகவும் அல்லது எட்டு ரூபாயாகவும் வழங்க வேண்டும். அப்படி வழங்கினால் தான் இந்த தொழில் செய்வதற்கு எங்களுக்கு உதவியாக இருக்கும்.

நாங்கள் கறிக்கோழி வளர்ப்பது 40 முதல் 50 நாட்கள் வரை வளர்க்க வேண்டி உள்ளது. மிகவும் கடுமையான போராட்டத்திற்கு இடையில் இந்த தொழிலை செய்து வருகிறோம். இது சம்பந்தமாக ஏற்கனவே மத்திய அரசிடமும் மாநில அரசிடமும் கோரிக்கை வைத்துள்ளோம் எங்களுக்கு அரசின் மானியம் வழங்க வேண்டும் விவசாயிகளுக்கு வழங்கக்கூடிய சலுகைகள் அனைத்தையும் கறிக்கோழி வளர்ப்பவர்களுக்கும் வழங்க வேண்டும்என பல்வேறு கோரிக்கைகள் வைத்து சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தி இருக்கிறோம். மதுரையில் ஆர்ப்பாட்டம் நடத்தி இருக்கிறோம். ஆனால் இதுவரை மத்திய அரசோ மாநில அரசோ எங்கள் கோரிக்கை செவி கொடுத்து கேட்கவில்லை. எந்த பதிலும் தெரிவிக்கவில்லை நாங்கள் போராட்டத்திற்கு மேல் தொடர் போராட்டம் நடத்திக் கொண்டுதான் இருக்கிறோம். இன்று கோழிப்பண்ணை தொழிலே முடங்கக்கூடிய நிலைமையில் போய்க்கொண்டிருக்கிறது விலைவாசி ஏற்றத்தினால் இந்த நிலைமை உருவாகி உள்ளது.
ஆனால் வெளியில் கோழியின் விலை ஒரு கிலோ 200-ல் இருந்து 400 வரை போய்க்கொண்டிருக்கிறது அதேபோல் முட்டையின் ரேட்டும் 8 ரூபாய் 10 ரூபாய் என்ற அளவில் உயர்ந்து உள்ளது. ஆனால் எங்களுக்கு கிடைப்பதோ வெறும் ஆறு அம்பது ரூபாய் மட்டுமே ஆகையால் இந்த ஆறு அம்பது ரூபாயை எட்டு அல்லது ஒன்பது ரூபாயாக உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் அப்படி உயர்த்தி கொடுத்தால் மட்டுமே கோழிப்பண்ணை வளர்ப்பவர்களின் சிரமங்களை குறைக்க முடியும்.
மேலும் விவசாயிகளுக்கு வழங்கக்கூடிய மானியங்களை கோழிப்பண்ணை உரிமையாளருக்கும் வழங்க வேண்டும் இவ்வாறு கூறினார்.