தென்காசி மாவட்டம் கடையம் ராமநதி அணை பகுதியில் களக்காடு முண்டந்துறை புலிகள் சரணாலயத்துக்கு உட்பட்ட பகுதியில் பொதுமக்கள் மற்றும் மது பிரியர்கள் வீசி சென்ற பாட்டில்களும், குப்பைகளும் மலை போல் குவிந்துள்ளது.

புலிகள் காப்பகத்திற்கு பகுதியில் இவ்வாறு குப்பைகளையும், மது பாட்டில்களையும் வீசி செல்லும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்காத களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக அதிகாரிகள். அதிகாரிகளின் அலட்சியத்தால் வனவிலங்குகள் மற்றும் இயற்கை மாசுபடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக மாவட்ட நிர்வாகமும் வனத்துறை மற்றும் காவல்துறை இணைந்து வேகமாக நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இயற்கையை காப்பாற்ற முடியும். அழிவை நோக்கி செல்லும் ராமநதி அணையின் மேல் பகுதியை காப்பாற்ற முடியும். சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.