புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் இருந்து தமிழக பகுதிக்கு சாலை மற்றும் கடல் மார்க்கமாக மது பாட்டில்கள் கடத்தப்படுகிறதா என்று போலீசார் நாள்தோறும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று இரவு காரைக்கால் அடுத்த அக்கம்பேட்டை கடற்கரையில் இருந்து படகு மூலம் தமிழக பகுதிக்கு மது பாட்டில்கள் கடத்தப்படுவதாக கோட்டுச்சேரி போலீசாருக்கு வந்த ரகசிய தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் படகு மூலம் தமிழகத்திற்கு கடத்திருந்த இரண்டு லட்சம் மதிப்பிலான மது பாட்டிலை பறிமுதல் செய்து படகில் இருந்து சீர்காழி பகுதியை சேர்ந்த மணிபாரதி, சிவன், குப்புராஜ் என்கின்ற மூன்று மீனவர்களை கைது செய்து கடத்தலுக்கு பயன்படுத்திய படகு மற்றும் ஒரு இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் புதுச்சேரி மாநிலத்திலிருந்து தமிழக பகுதிக்கு கடல் வழியாக படக்கு மூலம் மது பாட்டில் கடத்திய சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.