

புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு பிரச்சனை விவகாரத்தில் நீதிமன்ற தீர்ப்பு வரும் வரை இரு தரப்பினரும் எந்த விதமான அசம்பாவிதங்களிலும் ஈடுபடக்கூடாது.
நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு இடப்பிரச்சினை தொடர்பாக ஒரு முடிவு எடுக்கப்படும். அதுவரை இரண்டு தரப்பினரும் பிரச்சனைக்குரிய இடத்தை பயன்படுத்தக் கூடாது. புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற சமாதான கூட்டத்தில் இரு தரப்பினரும் ஒப்புதல் அளித்து கையொப்பமிட்டனர்.

புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு கிராமத்தில் இரண்டு சமூகத்தினர் பிரச்சனை ஏற்பட்டு பல்வேறு அசம்பாவித சம்பவங்கள் நடைபெற்றன. இது தொடர்பாக இரண்டு தரப்பினர் 28 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் பிரச்சனைக்குரிய இடத்தை யார் பயன்படுத்துவது என்பது தொடர்பாக புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் முன்னிலையில் சமாதான கூட்டம் நடைபெற்றது.
இதில் இரண்டு தரப்பினரும் சேர்ந்த இருவருக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் இந்த பேச்சுவார்த்தையில், வடகாடு பிரச்சனை விவகாரத்தில் நீதிமன்ற தீர்ப்பு வரும் வரை இரு தரப்பினரும் எந்த விதமான அசம்பாவிதங்களிலும் ஈடுபடக்கூடாது.
இதன் பின்னர் இரண்டு தரப்பினரும் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து புறப்பட்டு சென்றனர்.

