• Mon. Jul 6th, 2026
WhatsAppImage2026-07-03at000327
previous arrow
next arrow
Read Now

திமுக முகவர்களுக்கான பூத் கமிட்டி கூட்டம்

சாத்தூர் அருகே திமுக முகவர்களுக்கான பூத் கமிட்டி மீட்டிங் நடைபெற்றது. சாத்தூர் அருகே ஏழாயிரம் பண்ணையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திமுக பூத் கமிட்டி முகவர்கள் கூட்டம் நடைபெற்றது.

வெம்பக்கோட்டை கிழக்கு ஒன்றியம் சார்பில் கிழக்கு ஒன்றியச்செயலாளர் கிருஷ்ணக்குமார் தலமையில் நடைபற்ற இக்கூட்டத்திற்கு சாத்தூர் சட்டமன்ற தொகுதி தேர்தல் பொறுப்பாளர் பாஸ்கரன் சிறப்பு விருத்தினராக கலந்து கொண்டு பூத் முகவர்களின் செயல்பாடுகள் மற்றும் வாக்கு வங்கியை கூட்டுவதற்கு செயல்பட வேண்டிய பணிகள் குறித்து சிறப்புறை ஆற்றினார். உடன் நிகழ்ச்சியில் சாத்தூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் கடற்கரைராஜ் கலந்து கொண்டு பேசினார். மேலும் நிகழச்சியில் வெம்பக்கோட்டை கிழக்கு ஒன்றிய பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான நிர்வாகிகள் தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

இதே போன்று வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றியம் சார்பில் தாயில்பட்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திமுக பூத் கமிட்டி முகவர்கள் கூட்டம் நடைபெற்றது.

வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றியம் சார்பில் மேற்கு ஒன்றியச்செயலாளர் ஜெயபாண்டியன் தலமையில் நடைபற்ற இக்கூட்டத்திற்கு சாத்தூர் சட்டமன்ற தொகுதி தேர்தல் பொறுப்பாளர் பாஸ்கரன் சிறப்பு விருத்தினராக கலந்து கொண்டு பூத் முகவர்களின் செயல்பாடுகள் மற்றும் வாக்கு வங்கியை கூட்டுவதற்கு செயல்பட வேண்டிய பணிகள் குறித்து சிறப்புறை ஆற்றினார். உடன் நிகழ்ச்சியில் சாத்தூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் கடற்கரை ராஜ் கலந்து கொண்டு பேசினார். மேலும் நிகழச்சியில் வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றிய பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான நிர்வாகிகள் தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்.