மதுரை அருகே திருப்பரங்குன்றத்தில், அதிமுக பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. ஆகஸ்ட் மாதம் மதுரையில் நடைபெறும். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக மாநாடு சம்பந்தமான ஆலோசிக்கப்பட்டது. மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி பூத் கமிட்டி கூட்டமானது, புறநகர் கிழக்கு மாவட்டச் செயலாளர் எம். எல். ஏ.வுமான ராஜன் செல்லப்பா தலைமையில் நடைபெற்றது. இதில், கலந்து கொண்ட அனைவருக்கும் மாநாடு அழைப்பிதழ் வழங்கப்பட்டது. உடன் ஐடி பிரிவு மதுரை மண்டல செயலாளர்
ராஜ் சத்யன் மற்றும் அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.