• Fri. Jun 12th, 2026
WhatsAppImage2026-06-04at220632
previous arrow
next arrow
Read Now

மதுரை கொட்டாம்பட்டி அருகே புகையிலைப் பொருட்களை கடத்தி வந்த இருவர் கைது..,

ByKalamegam Viswanathan

Jun 12, 2026

மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் புகையிலை பொருட்கள் கடத்தி வருவதாக காவல் கண்காணிப்பாளர் அரவிந்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அவரது உத்தரவின் பேரில் போலீசார் அப்பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது இன்றே காலை அதிவேகமாக TN 05- BR 1685என்ற என் உள்ள சொகுசு வந்தது. அதனை சோதனை செய்து போது காரில் மூட்டை மூட்டையாக தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருப்பது தெரிய வந்தது.

இதனை அடுத்து அவற்றை கடத்தி வந்த ராஜஸ்தானை சேர்ந்த விக்ரம்குமார் (28) கிஷன் (25) இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 521 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் சொகுசு காரை பறிமுதல் செய்தனர்.

அவர்களிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை செய்ததில் இருவரும் ராஜஸ்தானை சேர்ந்தவர்கள் என்பதும், பெங்களூரில் ஒருவரிடம் கார் டிரைவராக சேர்ந்ததாகவும், பண்டல் பண்டல்களாக சொகுசு காரில் ஏற்றி வைத்து தமிழ்நாட்டிற்கு கொண்டு செல்லுங்க. நாங்கள் போன் பண்ணி சொல்வோம் அங்கு காரை காரை நிறுத்தினால் பண்டல்களை எடுத்துச் செல்வார்கள் என அவரை வேலைக்கு சேர்ந்த முதலாளி கூறியதாகவும், அதனால் காரை ஓட்டி வந்ததாகவும், சாக்கு மூட்டைகளில் என்ன இருப்பது என்று தங்களுக்கு தெரியாது என்றும் அதிக சம்பளத்துக்கு ஆசைப்பட்டு வந்ததாகவும் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் கூறினர். .

இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார் இந்த பண்டலை கொடுத்து அனுப்பியவரை பிடிக்க தீவீரம் காட்டி வருகின்றனர்.

இது குறித்து மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் கூறும்போது
தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 521 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து போலீசார் கஞ்சா உள்ளிட்ட புகையிலை பொருட்களின் நடமாடத்தை கண்காணித்து வருகிறார்கள்.

இது போன்று தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் தொடர்பாக தகவல் தெரிந்தால் 91760-79100 என்ற எண்ணிற்கு தகவல் தெரிவிக்கலாம்.
தகவல் தெரிவிப்போரின் விபரம் ரகசியம் காக்கப்படும் என கூறினார்.