• Fri. Mar 6th, 2026
WhatsAppImage2026-02-27at0552154
previous arrow
next arrow
Read Now

துபாய்க்கு புறப்பட்ட இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்….

Byகாயத்ரி

Aug 27, 2022

சென்னையிலிருந்து துபாய்க்கு இண்டிகோ விமானம் ஒன்று 160 பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்னை சர்வதேச விமான நிலையத்திலிருந்து இன்று காலை 7.40 மணியளவில் புறப்பட இருந்தது.

இந்நிலையில் துபாய் செல்லும் இண்டிகோ விமானத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக விமான கட்டுப்பாட்டு மையத்திற்கு போன் வந்துள்ளது. இதையடுத்து உடனடியாக விமானத்திலிருந்து பயணிகளை வெளியேற்றிய பாதுகாப்பு அதிகாரிகள் விமானத்தில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அதேசமயம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவரையும் ட்ரேஸ் செய்துள்ளனர். அதில் வெகுண்டு மிரட்டல் விடுத்தவரின் குடும்பமும் அந்த விமானத்தில் பயணிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் விமானம் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.