• Fri. Oct 9th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

ரேவதி இயக்கத்தில் பாலிவுட் நடிகை?

பிரபல நடிகை ரேவதி இயக்கத்தில் பாலிவுட் திரைப்படம் ஒன்று உருவாக இருப்பதாக கடந்த சில மாதங்களுக்கு முன் அறிவிப்பு வெளியானது. இந்த படத்தின் முக்கிய வேடத்தில் பிரபல பாலிவுட் நடிகை கஜோல் நடிப்பதாக அவ்வப்போது தகவல்கள் வெளியாகியிருந்தன!

இந்நிலையில் ரேவதி இயக்கத்தில் கஜோல் நடிப்பில் உருவாகும் திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கி உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. மேலும் இந்த படத்திற்கு சலாம் வெங்கி என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது என்பதும் இந்த படம் ஒரு உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாக உள்ளது என்பது கூடுதல் தகவல்!