கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணைக்கிணங்க,
மாவட்ட கழக செயலாளர், மாண்புமிகு கூட்டுறவுத் துறை அமைச்சர், கேஆர். பெரியகருப்பன் அவர்களின் அறிவுறுத்தலின்படி, புதன்கிழமை இன்று சிவகங்கை RDM காலேஜ் ரோடு அருகே உள்ள திமுக தெற்கு ஒன்றிய கழக அலுவலகத்தில் BLC பூத் கமிட்டி கூட்டம் நடைபெற்றது.

இதில் அந்தந்த பகுதி பொறுப்பாளர்களால் அறிவிக்கப்பட்ட நேரத்தில் வந்து பூத் கமிட்டி உறுப்பினர்கள் கலந்து கொள்ளவும். BLA2 மற்றும் கிளைக் கழக செயலாளர்கள் பூத் கமிட்டி உறுப்பினர்களை கலந்து கொண்டு சிவகங்கை தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர் ஜெயராமன் தலைமையில் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.
சிவகங்கை சட்டமன்ற பொறுப்பாளர் சு. சண்முகம் சிறப்புரை ஆற்றினார் மேலும் இந்நிகழ்ச்சியில் சிங்கமுத்து, மார்க்கரேட் கமலா, மனோகர் சுவாமிநாதன், செல்வம், அழகுசுந்தரம், வேல்முருகன், ரமேஷ், தங்கசாமி, முத்துக்குமார், போஸ், ஆனந்தராசு. உள்ளிட்ட ஏராளமான கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.





