• Sun. May 12th, 2024

கோவை விமான நிலையத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேட்டி

BySeenu

Dec 24, 2023

திமுக அரசியல் ,எப்படியாவது சண்டை போட்டு கொண்டு இருக்கணும், சென்னை, தென் மாவட்ட வெள்ளம், மிக மோசமாக கையாளபட்டதாக பேச படுகிறது. மத்திய ஆய்வு குழு வந்த பின்பு தான் மாநில முதலமைச்சர் செல்கிறார்.

நிவாரண பணிகளில் கவனம் செலுத்தாமல், மத்திய அமைச்சரை வம்புக்கு இழுப்பது தான் வேலை,

தென் தமிழக பாதிப்பு குறித்து நிர்மலா சீத்தாராம் டம் பேசியுள்ளேன்.நாளை மறுநாள் சேதத்தை நேரடியாக கணக்கீடு செய்ய வருகிறார்.முழு பொறுப்பை மத்திய அரசு எடுக்க வேண்டிய கட்டாயம் வந்துவிட்டது.

திமுக பொய் சொல்வது கலையாக வந்துவிட்டது. அப்போதைய தமிழகத்திற்கு 860 கோடி வழங்கியது. திமுக அடுத்த பொய்,வானிலை மையத்தின் மீது பொய். எல்லோ மற்றும் ரெட் அலர்ட் கொடுக்கும் போது கவனம் முழுவதும் திமுக மாநாடு, இண்டியா கூட்டணியில் இருந்தது.திருநெல்வேலி மேயர் சேலத்தில் இருந்தார்.

பொருளாதார மாநிலமாக உத்திரபிரதேசம்,தமிழ்நாட்டை முந்திவிட்டது. தமிழகம் 3 வதாக உள்ளது. மக்கள் பணத்தை திருடி கொண்டிருக்கிறார்கள், எந்த நிறுவனமும் வருவதற்கு தயாராக இல்லை,

தமிழகத்திற்கு முதன் முதலாக வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. உதயநிதி ஸ்டாலின் ,சனதனதை பற்றி தப்பா பேசவில்லை என்றார். அதனுடைய வெளிப்பு தான் , நிதிஷ்குமார் ஹிந்தி பாடம் எடுத்து இரண்டு பேருக்கும் பாடம் நடத்தி வெளியில் அனுப்பி உள்ளார்.

உதயநிதி திமுக கட்சியை மூட்ட கட்டி கடலில் போட போகிறார். வடிவேலு காமெடி போல் செய்ய போகிறார்.

சாதிவாரிய கணக்கெடுப்பு தமிழகத்தில் கமிசன் போட்டு, வெளியில் இடவில்லை, மற்ற மாநிலங்களில் ரிப்போர்ட் காணவில்லை என்கிறார்கள். தமிழகத்தை பொறுத்தவரை ஏழை என்கிற சாதி இருக்கக் கூடாது.

பைந்தமிழ் பாரி வீட்டில் ,கர்நாடக லோக் ஆயுக்தா,சோதனை மேற்கொண்டதில் கைது பண்ணிருக்க வேண்டும், ஆனால் நடவடிக்கை எடுப்பார்கள் என நம்பவில்லை.

திமுகவிற்கு அறிவில்லை, கம்னுஇஸ்ட் கட்சி திமுகவிற்கு ஜிங் ஜாங் அடிக்கிறார்கள்,

எம் எஸ் மி,க்கு நாங்கள் ஆதரவு, முதலமைச்சரை சந்திக்க பாஜக வராது, அது போன்ற நிலை எங்களது கட்சி க்கு வரவில்லை. மேகதாது அணை கட்ட முடியாது நு மத்திய அரசு சொன்ன பின்பு ,நீங்கள் ஏன் அனைத்து கட்சி கூட்டம் நடத்துகிறீர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *