விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே பாஜக குமரி கோட்டம் பிரச்சாரப் பிரிவு சார்பில் பேச்சாளர்கள் பயிற்சி முகாம் . இராஜபாளையம் அருகே தளவாய்புரம் காமராஜர் நகர் பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பிரச்சார பிரிவு மாநில இணை அமைப்பாளர் என். எம். எஸ்.விவேகானந்தன் தலைமை வகித்தார்.

பிரச்சார பிரிவு மாநில செயலர் மற்றும் பேச்சு பயிற்சி முகாம் ஒருங்கிணைப்பாளர், நடிகர் டி.ரவிச்சந்திரன் பயிற்சி முகாம் குறித்து விளக்க உரையாற்றினார். பாஜக மாநிலத் துணைத் தலைவர் கோபால்சாமி, விருதுநகர் மேற்கு மாவட்ட தலைவர் சரவணன் துரை(எ)ராஜா ஆகியோர் விழாவை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினர். பிரச்சார பிரிவு மாநில அமைப்பாளர் டி. எஸ் பாண்டியராஜன் வாழ்த்துரை வழங்கினார். இந்த முகாமில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர் உட்பட ஒன்பது மாவட்டங்களைச் சேர்ந்த 200 க்கும் மேற்பட்ட பேச்சாளர்கள் கலந்து கொண்டு தங்களுடைய பேச்சுத் திறமையை வெளிப்படுத்தினர்.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை பிரச்சார பிரிவு விருதுநகர் மேற்கு மாவட்ட தலைவர் முருகேஷ் வேலுச்சாமி , அயலகப் பிரிவு மேற்கு மாவட்ட செயலர் ஜோதிலிங்கம், மற்றும் அழகர்சாமி கோபாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.






