• Sun. Feb 1st, 2026
WhatsAppImage2026-01-31at0134274
previous arrow
next arrow
Read Now

பா ஜ க கட்சியின் கலந்தாய்வு கூட்டம்..,

விருதுநகரில் உள்ள பா ஜ கட்சி அலுவலகத்தில் விருதுநகர் சட்டமன்ற கலந்தாய்வு கூட்டம் அக்கட்சியின் மாவட்ட தலைவர் பாண்டுரங்கன் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக தமிழக தேர்தல் துணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி கலந்து கொண்டார்.

கலந்தாய்வு கூட்டத்தில் சுதாகர் ரெட்டி பேசிய போது ” திமுக கூட்டணி ஊழல் கூட்டணி, பா ஜ க லட்சிய கூட்டணி, தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு, சீர்கெட்டுள்ளது, கஞ்சா, கள்ள சாராயம் விற்பனை அதிகரித்து உள்ளது. தேர்தல் துணை பொறுப்பாளராக, முதல் கூட்டமாக இந்த புண்ணிய பூமியில் உரையாற்றுகிறேன்,எனக்கு தெலுங்கு, ஆங்கிலம் தெரியும், விரைவில் தமிழ் கற்றுக் கொள்கிறேன். தமிழகம், நாட்டுக்காக உழைத்த வ,உ,சிதம்பரம், திருப்பூர் குமரன், தேசியமும், தெய்வீகமும் எனது இரு கண்கள் என்று கூறிய முத்துராமலிங்க தேவர் போன்ற பல நல்ல தலைவர்களை கொண்டது. ஆனால் தமிழகத்தில் சனாதனத்தை , டெங்கு,மலேரியா போன்று ஒழிக்க வேண்டும் என்று ஒருவர் கூறினார், பா ஜ க பாண்டவர்கள், திமுக கௌரவர்கள்,ஆகவே வரும் சட்டமன்ற தேர்தலில் பா ஜ கட்சி கூட்டணி வெற்றி நிச்சயம்” என்று கூறினார்.

கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவரும் உறுதி மொழி ஏற்று கொண்டனர். விருதுநகரில் மூன்று முறை கவுன்சிலராக வெற்றி பெற்ற பொன்னுசாமி சுதாகர் ரெட்டி முன்பு தன்னை பா ஜ கட்சியில் இணைந்து கொண்டார். கூட்டத்தில் மாநில பொது குழு உறுப்பினர் கஜேந்திரன்,சந்திரன்வழக்குரைஞர் சரவணன், சக்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.