கோவாவில் முதல்வர் பிரமோத் சாவந்த் வெற்றி பெற்று, மீண்டும் ஆட்சி அமைக்க உள்ளார்.
கோவா மாநிலத்தில் 40 உறுப்பினர்களைக் கொண்ட சட்டசபைக்கு ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், ஆளும் பாஜக 19 இடங்களில் முன்னிலை வகித்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், கோவாவின் சாங்குலிம் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட முதல்வர் பிரமோத் சாவந்த் 500 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.இதையடுத்து பத்திரிகையாளர்களை சந்தித்த அவர், “கோவாவில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி அமைக்கும்” எனத் தெரிவித்தார்.