• Wed. Apr 29th, 2026
WhatsAppImage2026-04-23at013527
previous arrow
next arrow
Read Now

நாகையில் பாஜக சார்பில் மூவர்ணக் கொடி பேரணி

ByR. Vijay

May 25, 2025

நாகையில் ராணுவ வீரர்கள் பாரத பிரதமருக்கு நன்றி தெரிவித்து, பாஜக சார்பில் மூவர்ணக் கொடி பேரணி நடைபெற்றது. 500க்கும் மேற்பட்டோர் தேசியக்கொடியை ஏந்தி பங்கேற்றனர்.

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக நடைபெற்ற ஆப்ரேஷன் சிந்தூர் வெற்றி பெற்றதால், இந்திய ராணுவ வீரர்களுக்கும், பாரத பிரதமர் மோடி அவர்களுக்கு நன்றி தெரிவித்தும் நாடு முழுவதும் மூவர்ண கொடி பேரணி நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக நாகப்பட்டினம் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் மூவர்ண கொடி பேரணி இன்று மாலை நடைபெற்றது. நாகப்பட்டினம் நாலு கால் மண்டபம் அருகில் இருந்து பாஜக மாவட்ட தலைவர் விஜயேந்திரன் தலைமை தலைமையில் நடைபெற்ற பேரணியை தேசிய பொதுக்குழு உறுப்பினர் தங்க .வரதராஜன் தேசியக்கொடி அசைத்து தொடங்கி வைத்தார். கடைவீதி, நீலா கீழவீதி, அபிராமி அம்மன் சன்னதி, அண்ணா சிலை, புதிய பஸ் நிலையம் வழியாக அவுரித்திடலில் நிறைவு பெற்றது.

இதில் வர்த்தகர் சங்கத்தினர், அனைத்து சமூக நல அமைப்புகள், ஆட்டோ வேன் ஓட்டுநர் சங்கத்தினர் மற்றும் அனைத்து அரசியல் கட்சி சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் மூவர்ணக் கொடியுடன் பேரணியில் பங்கேற்று ராணுவ வீரர்களுக்கும் பாரத பிரதமருக்கும் நன்றி தெரிவித்தனர்.