• Thu. Jan 15th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

மாரிதாஸ் கைதை கண்டித்து பாஜகவினர் மீது வழக்குப்பதிவு

Byமதி

Dec 10, 2021

மதுரையில் நேற்று யூடியூபர் மாரிதாஸ் தமிழக அரசுக்கு எதிராகவும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் ட்விட்டரில் கருத்து பதிவிட்டதாகவும், இதற்காக நடவடிக்கை எடுக்கக்கோரி மதுரை மாநகர திமுக தகவல்தொழில்நுட்ப பிரிவை சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவர் சைபர்கிரைம் காவல்துறையினரிடம் புகார் அளித்திருந்தார்.

இந்த புகாரை அடுத்து, காவல்துறையினர் நான்கு பிரிவுகளின் கீழ் அவரை கைது செய்தனர். தொடர்ந்து அவரை உத்தமபாளையம் கிளை சிறையில் அடைத்துள்ளனர்.

இதனையடுத்து மாரிதாஸை நீதிமன்றத்திற்கு அழைத்து செல்வதற்கு முன்னர் அவருக்கு கொரோனா மற்றும் மருத்துவ பரிசோதனை செய்ய, அவரை காவல்துறையினர் பாதுகாப்புடன் மருத்துவமனைக்கு அழைத்து செல்ல முயன்றனர்.

அப்போது புதூர் காவல்நிலையம் முன்பாக காவல்துறையினர் வாகனத்தை முற்றுகையிட்டு பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் காவல்துறையினருக்கும் பாஜகவினருக்கும் இடையே கடுமையான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதுமட்டுமின்றி, மதுரை சூர்யா நகர் பகுதியில் உள்ள அவரது இல்லம், புதூர் காவல் நிலையம் மற்றும் நீதிபதிகள் குடியிருப்பு ஆகிய இந்த 3 பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்ட பாரதிய ஜனதா கட்சியின் மதுரை மாநகர் மாவட்ட தலைவர் டாக்டர் சரவணன் உள்ளிட்ட பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த 50 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பின்னர் மாரிதாஸ் மதுரை மாவட்ட 4-வது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி வீட்டில் காவல்துறையினர் ஆஜர்படுத்தினர், விசாரித்த நீதிபதி சுந்தர காமேஸ்வர மார்த்தாண்டம், யூடியூபர் மாரிதாஸை வருகின்ற 23 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட உத்தரவிட்டார் .