திண்டுக்கல் மாநகராட்சி கூட்டத்தில் பங்கேற்க சஸ்பெண்ட் செய்ததை எதிர்த்து பாஜக மாமன்ற உறுப்பினர் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு – ஆவணங்களை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திண்டுக்கல் மாநகராட்சி 14-வது வார்டு பாஜக மாமன்ற உறுப்பினர் தனபாலன் கடந்த 26-ம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் அமைச்சர் சக்கரபாணி உறவினர் வீடு அருகே மழைநீர், சாக்கடை நீர் முழங்கால் அளவுக்கு தேங்குகிறது. பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. அமைச்சர் மீது மேயருக்கு ஏதும் தனிப்பட்ட கோபமா? என்றேன். இதற்கு கூட்டத்திற்கு குந்தகம் விளைவித்தாக கூறி, என்னை 2 கூட்டங்களில் பங்கேற்கக்கூடாது என சஸ்பெண்ட் செய்து மேயர் உத்தரவிட்டார். இதை ரத்து செய்ய வேண்டும் மதுரை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்
இந்த மனுவை விசாரித்த நீதிபதி விஜயகுமார், பணியிடை நீக்கம் செய்து பிறப்பித்த உத்தரவு மற்றும் மாநகராட்சியில் நிறைவேற்றப்பட்ட தீர்மான நகல் உள்ளிட்ட ஆவணங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்தார்.








