• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

அதிக அளவில் பட்டாசு ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுக்க உறுதியளித்தார்- பா.ஜ., வேட்பாளர் நடிகை ராதிகா

ByG.Ranjan

Mar 31, 2024

பா.ஜ., வேட்பாளர் நடிகை ராதிகா வெம்பக்கோட்டையில் உள்ள தமிழன் கேப் வெடி பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கத்தினரிடம் ( டாப்மா) ஆதரவு கேட்டு ஓட்டு சேகரிக்க வந்தார்.
அவர்களிடம் பேசுகையில், பட்டாசு தொழிலில் உள்ள பிரச்னைகளை தீர்க்க பாடுபடுவேன். பட்டாசுக்கு உள்ள அனைத்து தடைகளையும் நீக்குவதற்கு முயற்சி செய்வேன். சிவகாசியில் இருந்து அதிக அளவில் பட்டாசுகளை ஏற்றுமதி செய்வதற்கு நடவடிக்கை எடுப்பேன் என்றார். தொடர்ந்து அவரிடம் டாப்மா தலைவர் கணேசன், செயலாளர் மணிகண்டன் உறுப்பினர்கள், சுற்றுச்சூழல் விதியிலிருந்து பட்டாசுக்கு விதிவிலக்கு பெற்றுத் தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். கண்டிப்பாக முயற்சி செய்வேன் என உறுதியளித்தார். உடன் சரத்குமார், கட்சியினர் இருந்தனர்.