
முதியோர் ஆண்கள் காப்பகத்தில் வைத்து பிறந்த நாள் விழா கொண்டாடிய தனியார் சேவை மையம் உறுப்பினர்கள்.
பாதர் மதர் சைல்ட் வெல்பர் என்னும் தனியார் சேவை மைய அமைப்பு நிர்வாகிகள் தங்களது குடும்ப உறுப்பினர்கள் பிறந்த நாள் மற்றும் திருமண நாட்களை முதியோர் இல்லத்தில் வைத்து கொண்டாடுவது வழக்கம்.

அதை போல இந்த அமைப்பின் நிறுவன தலைவரின் கணவர் பிறந்த நாளை அவரது மனைவி மகாலெட்சுமி தனது மையத்தின் உறுப்பினர்களுடன் சேர்ந்து சென்னை தண்டையார்பேட்டையில் அமைந்துள்ள காலரா மருத்துவமனை ஆண்கள் காப்பகத்தில் வைத்து கேக் வெட்டி இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

இதனை தொடர்ந்து இந்த ஆண்கள் காப்பகத்தில் உள்ள சுமார் 40 பேருக்கு உணவு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியும் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் சேவை மைய உறுப்பினர், மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

