• Mon. Nov 24th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

தூத்துக்குடியில் விசிட் அடிக்கும் பறவைகள்.., கணக்கெடுக்கும் பணியில் அதிகாரிகள்..!

Byவிஷா

Jan 29, 2022

தூத்துக்குடி மாவட்டத்தில் நடந்த பறவைகள் கணக்கெடுக்கும் பணியை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் நேரில் சென்று ஆய்வு செய்தார்.


கடலோர மாவட்டமான தூத்துக்குடி மாவட்டத்தில் வெளிநாட்டு பறவைகள் அதிகமாக இனப்பெருக்கத்திற்காக வருவதும், பின்னர் தங்களது நாடுகளுக்கு குஞ்சுகளுடன் புறப்பட்டு செல்வதும் வழக்கம்.

அதன்படி இந்த வருடம், தூத்துக்குடி மாவட்டத்தில் அதிக மழைப்பொழிவு இருந்த காரணத்தினால் ஆங்காங்கே குளம், குட்டைகள் மற்றும் கடலோர பகுதிகளில் தண்ணீர் தேங்கி நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த தண்ணீரில் அதிக அளவு பறவைகளின் உணவான மீன்கள், பூச்சிகள் காணப்படுவதால் அதனை உண்பதற்கும், இனப்பெருக்கம் செய்வதற்கும் நவம்பர், டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி ஆகிய மாதங்களில் உலகின் வட பகுதியில் உள்ள நாடுகளான ரஷ்யா, நைஜீரியா, தாய்லாந்து உள்ளிட்ட பகுதிகளில் இருந்து அதிக பறவைகள் நமது இந்தியாவிற்கு அதிலும் தமிழகத்தில் தென் பகுதியான தூத்துக்குடி மாவட்டத்திற்கு அதிக அளவில் வருகின்றன.


இந்த பறவைகள் வருகையை கணக்கில் கொண்டு நமது பகுதியின் தட்ப வெப்பநிலையை அறிந்து கொள்ள முடிகிறது. மேலும் பறவைகள் வருகை குறைந்துள்ளதா? அதிகரித்துள்ளதா? என்பது குறித்து ஆண்டுதோறும் அறியமுடிகிறது.

எனவே சுற்றுச்சூழல் மாசு மற்றும் புவி வெப்பமயமாதல் உள்ளிட்ட பல்வேறு முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களை உள்ளடக்கிய இந்த பறவைகள் வருகை கணக்கெடுப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகவே கருதப்படுகிறது. இன்று தூத்துக்குடி முள்ளக்காடு பகுதியில் நடந்த பறவைகள் கணக்கெடுக்கும் பணியை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் நேரில் சென்று ஆய்வு செய்தார். இதில் தன்னார்வலர்கள் மற்றும் வனத்துறையினர் கலந்துகொண்டு கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.