• Fri. Oct 11th, 2024

மீண்டும் பிகில் ராயப்பன் என்ட்ரியா..?? அட்லி சொன்ன பதில்..

Byகாயத்ரி

May 27, 2022

தமிழ் சினிமாவில் வெளியான ராஜா ராணி படம் மூலம் அட்லி இயக்குனராக அறிமுகமானார். அதன் பிறகு விஜய் நடித்த தெறி,மெர்சல், மற்றும் பிகில் ஆகிய திரைப்படங்களை இயக்கி பிரபலமானார். இவர் தற்போது ஷாருக்கான் நடித்து வரும் “கிங்” என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில் நயன்தாரா கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்த படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இவர் இயக்கிய பிகில் திரைப்படம் அதிக வரவேற்பை பெற்றதுஇதில் ராயப்பன் மற்றும் மைக்கேல் என இரு வேடங்களில் விஜய் நடித்து இருந்தார். இப்படத்தின் ராயப்பன் கதாபாத்திரம் ரசிகர்களை கவர்ந்தது. இந்நிலையில் அமேசான் ஓடிடி தளத்தின் சமூக வலைத்தள பக்கத்தில், பிகில் ராயப்பன் புகைப்படத்தை பகிர்ந்து ‘ராயப்பன் கதையை மட்டும் வைத்து முழு படம் உருவனால் எப்படி இருக்கும் என்று நினைத்து பாருங்கள்’ என்று பகிரப்பட்டது. இதற்கு பதிலளித்த இயக்குனர் அட்லி, ‘செஞ்சிட்டா போச்சு’ என்று பதிவிட்டுள்ளார். அட்லியின் இந்த பதிலால் விஜய் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். விரைவில் விஜய் மற்றும் இணைந்து பணியாற்ற உள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *