• Thu. May 2nd, 2024

கொரோனா கட்டுப்பாட்டை அமல்படுத்திய பீகார் அரசு

Byவிஷா

Dec 23, 2023

இந்தியாவிலேயே முதல் மாநிலமாக, பீகார் அரசு கொரோனா கட்டுப்பாட்டை அமல்படுத்தி உள்ளது.
இந்தியாவில் கொரோனா அலை பெரும் கலக்கத்தை உண்டாக்கியது. அதன்பிறகு ஏற்பட்ட இரண்டாவது அலையில் ஏராளமான உயிரிழப்புகள் பதிவாகின. இதிலிருந்து மீண்டு வருவதற்கு ஓராண்டிற்கும் மேல் ஆகிவிட்டது. இதற்கிடையில் கொரோனாவின் உருமாறிய வைரஸ்கள் பரவத் தொடங்கின. இருப்பினும் எதுவுமே பெரிய அளவில் அலையை உருவாக்கவில்லை. இந்நிலையில் தான் ஜே.என்.1 என்ற புதிய உருமாறிய வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
இந்நிலையில் புதிய வகை ஜே.என்.1 கொரோனா தொற்று வேகமெடுத்துள்ள நிலையில், இந்தியாவிலேயே முதல் மாநிலமாக கொரோனா கட்டுப்பாட்டை பீகார் அரசு அமல்படுத்தியுள்ளது. காய்ச்சல், இருமல், சுவாச பிரச்னை இருந்தால் உடனே கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். பொது இடங்களில் மாஸ்க் அணிய வேண்டும். கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *