• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

பிக்பாஸ் சீசன் 6ல் ஜி.பி.முத்துவை கதறவிடும் போட்டியாளர்கள்- வைரல் வீடியோ

ByA.Tamilselvan

Oct 11, 2022

பிக்பாஸ் சீசன் 6 துவங்கியுள்ள நிலையில் டிக்டாக் பிரபலமான ஜி.பி.முத்துவை சகபோட்டியாளர்கள் வம்பிழுக்கும் வீடியோ வைரலாகிஉள்ளது.
விஜய் டிவி-யில் நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் 6 நிகழ்ச்சி நேற்று துவங்கியது. 100 நாட்கள் நடக்கும் இப்போட்டியில் அனைத்து கடினமான தருணங்களையும் கடந்து இறுதிவரை பிக் பாஸ் வீட்டுக்குள் இருப்பவரே டைட்டில் வின்னராவார். இந்த வருட பிக் பாஸ் நிகழ்ச்சியின் மீதும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது
டிக் டாக் புகழ் ஜி.பி.முத்து பிக் பாஸ் 6-ன் முதல் போட்டியாளராகக் கலந்துக் கொண்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியை சேர்ந்த இவரின் முழுப்பெயர் ஜி.பேச்சுமுத்து. இவரின் வீடியோக்கள் இணையத்தில் பிரசித்தம்.
இந்நிலையில் ஜி.பி.முத்துவை எந்தளவிற்கு வம்பிழுக்க முடியுமோ அந்தளவிற்கு செய்து வருகிறார்கள்.இரவில் தூங்கி கொண்டிருந்த அவரை,சக போட்டியாளரான ராபர்ட் மாஸ்டர் கீழே குனிந்து சென்று பயமுறுத்துகிறார். இதனால் பதறிப்போன ஜி.பி.முத்து பெட்டில் இருந்து கீழே விழுகிறார். இதை கண்ட அங்கிருந்த அனைவரும் சிரிக்கின்றனர். வெகுளியான ஒருவரை இப்படி செய்வது சரியா?