

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பலர் சினிமாத்துறையில் காலடி வைத்து சிறப்பான நடிகர்களாக தங்களை நிலைநிறுத்திக் கொண்டுள்ளனர். அந்த வகையில் பிக் பாஸ் டைட்டில் வின்னரான ஆரி அர்ஜுனா தற்போது அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார்.
நடிகர் ஆரி அர்ஜுனா நெடுஞ்சாலை, மாயா உள்ளிட்ட படங்களில் நடித்து புகழ்பெற்ற நிலையில், பிக் பாஸ் 4வது சீசனிலும் கலந்து கொண்டார். அந்நிகழ்ச்சியில் சிறப்பாக செயல்பட்டு, டைட்டில் வின்னராகவும் ஆனார். இதனால் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் கிடைத்தனர். தொடர்ந்து இவருக்கு இதன்மூலம் பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. தேர்ந்தெடுத்த கதைகளில் இவர் தற்போது நடித்து வருகிறார். அவரது நடிப்பில் பகவான், அலேகா, எல்லாம் மேல இருக்கறவன் பார்த்துக்குவான் உள்ளிட்ட படங்கள் ரிலீசுக்கு தயாராக உள்ளன.
மேலும் அறிமுக இயக்குநர் அபின் இயக்கத்தில் போலீஸ் அதிகாரியாகவும் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இதில் வித்யா பிரதீப், முனிஷ்காந்த் உள்ளிட்டவர்கள் லீட் கதாபாத்திரத்திரங்களில் நடித்து வருகின்றனர். இன்ஸ்வெஸ்டிகேஷன் க்ரைமாக இந்தப் படம் உருவாகி வருகிறது.
இதனிடையே ஆரி அர்ஜுனாவின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு நாளை வெளியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று பகல் 12.12 மணிக்கு இந்த அறிவிப்பு வெளியாக உள்ளது. இந்தப் படத்தில் அஞ்சு குரியன் ஆரிக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார்.
மேலும் படத்தில் ஈரோடு மகேஷ், தமன்குமார், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்டவர்கள் நடிக்கவுள்ளனர். பாடல்களை பாடலாசிரியர் விவேகா எழுதவுள்ளார். மணிவர்மன் படத்தை தயாரிக்கவுள்ள நிலையில், நாளைய தினம் படத்தின் அறிவிப்பு வெளியாகவுள்ளது. முந்தைய படத்தில் காவல் அதிகாரியாக அவர் நடிக்கவுள்ள நிலையில், இந்தப் படத்தில் என்ன மாதிரியான கேரக்டரில் நடிப்பார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது.
