திருப்பூர் மாவட்டம் இருசக்கர வாகனம் பழுது நீக்குவோர் நல சங்கம் சி ஐ டி யு சார்பில் உறுப்பினர் அடையாள அட்டை வழங்கும் விழா, பணிமனைச் சான்றிதழ் வழங்கும் விழா, மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் இணையும் விழா பல்லடத்தை அடுத்த திருமுருகன் மில் பஸ் நிறுத்தம் அருகில் விநாயகா டயர்ஸ் கட்டிடத்தில் சங்கத்தின் தலைவர் பி வேடியப்பன் தலைமையில் வெகு விமர்சியாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் 70, மேற்பட்ட உறுப்பினர்களுக்கான அடையாள அட்டை பணிமனைச் சான்றிதழ்களை சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஒய் அன்பு வழங்கி சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் சங்கத்தின் கவுரவ தலைவர் தியாகராஜன், சிறப்பு அழைப்பாளர் எஸ். சிவராமன், சிறப்பு விருந்தினர் விநாயகா டயர்ஸ் உரிமையாளர் ரங்கநாதன் மற்றும் எல்.ஐ.சி ஸ்டார் ஹெல்த் காப்பீடு நிறுவனத்தின் பகுதி மேலாளர்கள் எஸ். மெய்ஞான மூர்த்தி, ஈ. வளர்மதி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். சங்கத்தின் நிர்வாகிகள் துணைத்தலைவர்கள் பிரேம்குமார், மூவேந்திரன் துணைச்செயலாளர்கள் சுரேஷ்குமார், முருகேசன், பொருளாளர் வினோத்குமார், மற்றும் கமிட்டி உறுப்பினர்கள் உள்ளிட்டோர் 70 மேற்பட்டோர் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். தொழில் விஸ்தரிப்புக்கான மானிய கடனு உதவியை அனைத்து பழுது நீக்குபவர்களுக்கும்( மெக்கானிக்குகள) அங்கீகரிக்கப்பட்ட அரசு வங்கிகள் மூலம் கடன் ஏற்பாடு செய்து தர ஒன்றிய மற்றும் மாநில அரசு முன் வரவேண்டும் என்கிற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் சங்க விசித்தரிப்பை கொண்டு செல்வது என்ற தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது என அவர் தெரிவித்தார்.
