மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளம் கிராமத்தில் அகமுடையார் முன்னேற்ற சங்க அறக்கட்டளை புதிய கட்டிடம் கட்ட பூமி பூஜை நடைபெற்றது. கிராம தலைவர் சோலை கேபிள் ராஜா தலைமை வகித்தார். தான செட்டில்மெண்ட் பத்திரத்தை சங்க நிர்வாகிகளிடம் வழங்கினார்.

தொடர்ந்து அவருக்கு கிராமத்தினர் சார்பாக பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இதில் அகமுடையார் முன்னேற்ற சங்க தலைவர் கிருஷ்ணன், செயலாளர் தெய்வேந்திரன் பொருளாளர் குமார், செல்லமுத்து இன்ஜினியர் கண்ணன் கருணாகரன் சின்னுசேர்வை முத்தையா கருப்பு பாண்டி மகாமுனி காமராஜ் ரவி மகாலிங்கம் திருப்பதி வெற்றி மற்றும் கிராம பெரியவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.








