• Wed. Dec 10th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவிலில் பீமன் கீசகன் வதம்

ByN.Ravi

May 18, 2024

சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவில் பூக்குழி திருவிழா 6ம் நாள் திருவிழா பீமன் கீசகன் வதம் நடைபெற்றது.இவ்விழாவை முன்னிட்டு பீமன் மகாபாரதத்தில் வருவது போல் வேடம் புரிந்து காவடியை பிடித்துக்கொண்டு கெதையுடன் கீசகளை தெருத்தெருவாக விரட்டி பிடிக்கும் காட்சி பக்தர்களிடையே மெய்சிலிர்க்க வைத்தது. பீமன் செல்லக்கூடிய இடமெல்லாம் பக்தர்கள் அபிஷேகம் செய்து,பீமனுக்கு பிடித்த சர்க்கரையால் அரிசியை பிசைந்த(கலந்து) கொடுத்து பீமனிடம் ஆசி பெற்றனர். கோவிலிலிருந்து புறப்பட்டு நகரில் அனைத்து பகுதியிலும் வலம் வந்து கோவிலை வந்தடைந்தனர். கோவில் முன்பாக மாவிளக்கு எடுத்து பூஜைகள் செய்தனர். நாளை இரவு அர்ஜுனன்தபசு,நாளை மறுநாள் திங்கள்கிழமை இரவு அம்மன் சிங்கவாகனத்தில் எழுந்தருளி காளிவேடம் புரிந்து 4 ரதவீதியில் பவனி வருதல், இரவு அரவான் பலி கொடுத்து கருப்புசாமி வேடம் புரிந்து காவல் கொடுக்கும் நிகழ்ச்சி, செவ்வாய்க்கிழமை இரவு துரியோதனன் படுகளம் திரௌபதி வேடம் சபதம் முடித்தல் கூந்தல் முடிப்பு நிகழ்ச்சி நடைபெறும். புதன்கிழமை மாலை 5 மணி அளவில் மந்தை களத்தில் பக்தர்கள் பூக்குழி நிகழ்ச்சி நடைபெறும்.