• Mon. Jan 12th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

103 அடியை எட்டிய பவானிசாகர் அணை – மகிழ்ச்சியில் விவசாயிகள்

Byமதி

Nov 7, 2021

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையின் நீர்மட்டம், இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் 103 அடியை எட்டி உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

பவானி ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் கனமழையால் பவானிசாகர் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. இதனால் 105 அடி உயரம் கொண்ட பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 103 அடியாக உயர்ந்துள்ளது. நீர்வரத்து வினாடிக்கு 6 ஆயிரத்து 948 கனஅடியாக உள்ளது.

கீழ்பவானி வாய்க்காலில் உடைப்பு ஏற்பட்டதால் பாசனத்திற்காக தண்ணீர் திறப்பது நிறுத்தப்பட்டுள்ளது. குடிநீர் தேவைக்காக மட்டும் வினாடிக்கு 100 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. அணையின் நீர் இருப்பு 31.5 டி.எம்.சியாக உள்ளது. பவானிசாகர் அணை மூலம் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும் என்பதால் உழவர்கள் எல்லையில்லா மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.