• Sat. Mar 22nd, 2025

ஆற்றுக்கால் பகவதி அம்மன் பொங்கல் விழா

திருவனந்தபுரத்தில் ஆற்றுக்கால் பகவதி அம்மன் பொங்கல் விழா வழிபாட்டில் கின்னஸ் சாதனை படைத்த ஆற்றுக்கால் பகவதி கோவில் விழா மார்ச் 5_ம் தேதி ஆரம்பமாகிறது.

எதிர் வரும் மார்ச் 5ம் நாள் பொங்கல் விழாnதொடங்குகிறது. அம்மன் வழிபாட்டில் கின்னஸ் சாதனை படைத்த ஆற்றுக்கால் பகவதி கோவிலின் கடந்த ஆண்டு திருவிழாவில் பொங்கல் இட்டப் பெண்களின் எண்ணிக்கை 35_லட்சம், இந்த ஆண்டு 40_ லட்சத்தை எட்டும் என நம்பிக்கை தெரிவித்தனர்.

நாகர்கோவில் பத்திரிகையாளர்கள் அமைப்பில் ஆற்றுக்கால் பகவதி கோவிலின் நிர்வாக குழுவினர் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தெரிவித்தவை. மார்ச் 5_ம் நாள் காலை 10 மணிக்கு அம்மனுக்கு காப்புகட்டிகுடியிறுத்தி திருவிழா ஆரம்பமாகிறது. இந்த நிகழ்வில் லட்சக்கணக்கான பெண் பக்தர்கள் பங்கு பெறும் உலக புகழ் பெற்ற ஆற்றுங்கால் விழா மார்ச்13_ம் தேதி நடைபெறுகிறது.பண்டார (பெரிய) அடுப்பில் காலை 10.15மணிக்கு தீமூட்டப்படும். மதியம் ன1.30க்கு பொங்கல் நெய்வேத்தியம் நடைபெறும்.
பொங்கல் திருவிழாவான13_ம் தேதி திருவனந்தபுரம் மாவட்டத்திற்கு உள்ளூர் சிறப்பு விடுமுறையை மாநில முதல்வர் பிரணராய் விஜயன் அறிவுத்துள்ளதாக ஆலைய நிர்வாகிகள் தெரிவித்தனர்.