
மதுரை பீஸ் நிக்காஹ் மேட்ரிமோனி பீஸ் பாண்டேசனின் ஏழாம் ஆண்டு துவக்க விழாவில் டிசம்பர் மாதத்திற்குள் 20 ஆயிரம் நிக்காக்கள் முடிக்க வேண்டும் என உயரிய நோக்கத்துடன் செயல்படுகிறோம் என நிறுவனர் முகமதுபாரூக் கூறினார்.
மதுரையில் சர்வேயர் காலனி பகுதியில் அமைந்துள்ள பீஸ் அமைப்பின் அலுவலகத்தில் பீஸ் நிக்காஹ் மேட்ரிமோனியின் 7 ஆம் ஆண்டு துவக்க விழாவில் 500 ற்கும் மேற்பட்ட பெண் மற்றும் மாப்பிள்ளை பெற்றோர்கள் கலந்துக்கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பீஸ் நிக்காஹ் மேட்ரிமோனியின் நிறுவனரும், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞருமான முகமது பாரூக் அவர்கள் தலைமை தாங்கினார். இந்த நிகழ்ச்சியில் மதுரை, சிவகங்கை, தேனி, ராமநாதபுரம், பரமக்குடி, புதுக்கோட்டை, திருச்சி, பெரம்பலூர், காஞ்சிபுரம், சென்னை, திருநெல்வேலி, தூத்துக்குடி போன்ற தமிழ்நாட்டின் பல்வேறு ஊர்களில் இருந்து பெற்றோர்கள் கலந்துக்கொண்டனர். பீஸ் நிக்காஹ் மேட்ரிமோனியின் நிறுவனர் முகமது பாரூக் கூறுகையில், இதுவரை 6 ஆண்டுகளில், 9750 நிக்காஹ்கள் வரதட்சணை இல்லாமல் நடத்து முடித்துள்ளதாகவும், இன்று ஒரே நாளில் 100 பேருக்கு வரன் கிடைத்து நிக்காஹ் முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார். அதே போன்று வருகின்ற டிசம்பர் மாதத்திற்குள் 20 ஆயிரம் நிக்காக்கள் முடிக்க வேண்டும் என உயரிய நோக்கத்துடன் செயல்படுகிறோம் எனவும்
இந்நிகழ்ச்சியில் எந்த ஒரு நுழைவுக்கட்டணமோ, புரோக்கர் கமிஷனோ கிடையாது என்றும் இதை ஒரு சமூக சேவையாக செய்து வருவதாகவும் கூறியுள்ளார்.