

சோழவந்தான் பேரூராட்சி கணக்கர் முறைகேட்டில் ஈடுபடுவதாக திமுக கவுன்சிலர்கள் புகார் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. இங்கு கணக்கராக கல்யாணம் சுந்தரம் பணியாற்றி வருகிறார். இவர் பேரூராட்சி வீட்டு மனை கட்டண வசூலில் முறைகேடு செய்வதாகவும், வார்டு கவுன்சிலர்களின் தீர்மான புத்தகத்தில் முறைகேடாக கையெழுத்து பெற்றதாகவும், பேரூராட்சி நிர்வாகத்திற்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தியதாகவும், பேரூராட்சி ஒன்றாவது வார்டு கவுன்சிலர் ஈஸ்வரி ஸ்டாலின், இரண்டாவது வார்டு கவுன்சிலர் முத்துச்செல்வி சதீஷ், 14வது வார்டு கவுன்சிலர் நிஷா கௌதம ராஜா ஆகியோர் கூட்டாக பேரூராட்சி செயல் அலுவலரிடம் மனு அளித்தனர். விரைவில் விசாரணை செய்து துறைரீதியாக அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.


