கூந்தல் பளபளப்;பிற்கு:
கேரட் மற்றும் வாழைப்பழ ஹேர் மாஸ்க்:
தேவையான பொருட்கள்
கேரட் – 1, வாழைப்பழம் – 1, தயிர் – 2 மேசைக்கரண்டி
செய்முறை:
மேலே கூறிய எல்லா மூலப்பொருட்களையும் ஒன்றாக அரைத்து ஒரு மென்மையான விழுதாக்கிக் கொள்ளவும். உங்கள் உச்சந்தலையில் இந்த விழுதைத் தடவி, மென்மையாக மசாஜ் செய்யவும். உங்கள் உச்சந்தலையில் உள்ள எல்லா முடிகளிலும் இந்த விழுது இருக்கும்படி முழுவதுமாகத் தடவவும். அரை மணி நேரம் அப்படியே ஊறவிடவும். பிறகு மென்மையான மூலிகை ஷாம்பு கொண்டு தலையை அலசவும். கூந்தல் மிருதுவாகி உங்கள் அழகை மேலும் அழகாக்கும். கேரட்டில் உள்ள வைட்டமின்கள் கூந்தல் உதிர்வை தடுக்கும்.