முகத்தில் பரு தழும்புகள் மறைய:
சந்தன கட்டையை நீரில் சில மணிநேரம் ஊற வைக்க வேண்டும். பின் அந்த கட்டையை எடுத்துவிட்டு, சிறிதளவு பஞ்சைப் பயன்படுத்தி அந்நீரை தழும்புகள் உள்ள இடத்தில் தடவ வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு பல முறை என ஒரு வாரம் தொடர்ந்து செய்து வந்தால், முகத்தில் உள்ள பரு தழும்புகள் மறைவதைக் காணலாம். இல்லாவிட்டால், சந்தன கட்டையை ஒரு கல்லில் ரோஸ் வாட்டர் பயன்படுத்தி தேய்த்து பேஸ்ட் தயாரித்துக் கொள்ள வேண்டும். பின் அந்த பேஸ்ட்டை இரவு தூங்கும் முன் தழும்புகளின் மீது தடவி, இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் நீரில் கழுவ வேண்டும்.
அழகு குறிப்புகள்
