முகம் பொலிவு பெற:
கேரட்டில் வைட்டமின் ஏ அதிகம் இருப்பதால், அவை முகப்பருவிற்க்கு மருந்தாகப் பயன்படும். பளபளப்பான சருமத்திற்கு இந்த ஆரோக்கியமான காய்கறியை சாப்பிட வேண்டும். தேவையான கேரட்டை எடுத்து அதனை வேகவைத்து பின்னர் மசித்து முகத்திற்கு தடவ வேண்டும். காய்ந்த பிறகு முகத்தில் இருந்து உரித்து எடுத்த பிறகு வெதுவெதுப்பான நீரில் ஒத்தடம் கொடுக்க வேண்டும். ஒரு காட்டன் துணியில் நீரை தொட்டு சிறிது நேரம் ஒத்தடம் கொடுத்தால் முகத்தில் உள்ள தூசு மட்டும் இறந்த செல்கள் போய்விடும். வாரம் இரண்டு நாட்களுக்கு இப்படி செய்து வந்தால் முகம் பொலிவு பெறும்.