

முகம் பளபளக்க வாழைப்பழ மசாஜ்:
வாழைப்பழம்-4, பால்- 2 டம்ளர்.
செய்முறை:
வாழைப்பழங்களை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் வைத்து கொள்ள வேண்டும். ஒரு கிண்ணத்தில் நறுக்கிய வாழைப்பழ துண்டுகளை போட்டு நன்றாக பிசைய வேண்டும். பின்னர் ஒரு 1 டம்ளர் பாலை ஊற்றி நன்றாக பிசைந்து கொள்ள வேண்டும். பின் அதனை கையில் எடுத்து முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் தடவி மசாஜ் செய்து கொள்ள வேண்டும். இதையடுத்து சில மணி நேரம் உலரும் வரை காத்திருக்க வேண்டும். உலர்ந்த பின் மிதமான சூட்டில் இருக்கக்கூடிய நீரில் முகத்தை கழுவி காட்டன் துணியால் முகத்தை துடைக்க வேண்டும். இந்த செய்முறையை வாரத்திற்கு 3 முறை தொடர்ந்து செய்து வந்தால் முகம் பளபளவென்று ஜொலிக்கும்.
