

முகத்தில் உள்ள கருந்திட்டுகள் மறைய சீரம்:
இந்த சீரத்தை நம் வீட்டில் இருக்கும் எளிமையான பொருட்களை கொண்டு தான் செய்யப் போகிறோம். இதற்கு முதல் மூலப்பொருளாக தக்காளி பழச்சாறை சேர்க்கப் போகிறோம். இதற்கு நல்ல பழுத்த தக்காளியாக எடுத்து அதில் பாதி தக்காளியின் சாறை மட்டும் வடிக்கட்டி ஒரு பவுலில் எடுத்துக் கொள்ளுங்கள்.
இப்போது தக்காளி பழச்சாறில் ரெண்டு ஸ்பூன் பச்சரிசி மாவை கலந்து கொள்ளுங்கள். இது இரண்டையும் நன்றாக கலந்து விட்ட பிறகு ஒரு டீஸ்பூன் தேனையும் கலந்து மீண்டும் ஒரு முறை இதை நல்ல பேஸ்ட் பதத்திற்கு குழைத்துக் கொள்ள வேண்டும். அதன் பிறகு இதில் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி மீண்டும் ஒரு முறை கலந்து கொள்ளுங்கள். இந்த பேஸ்ட் ஒரு லிக்விட் பதத்திற்கு வர வேண்டும். அதுவரைக்கும் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி கலந்து கொள்ளுங்கள்.
இந்த சீரம் போடுவதற்கு முன்பாக முகத்தில் உங்கள் முகத்தை சுத்தம் செய்து கொள்ளுங்கள். அதன் பிறகு இந்த சீரத்தை ஒரு சிறிய கரண்டியை வைத்து உங்கள் முகம் முழுவதும் தேய்த்த பிறகு அரை மணி நேரம் அப்படியே விட்டு விடுங்கள். இதை தேய்த்த பிறகு மசாஜ் செய்ய வேண்டும் என்ற அவசியம் கிடையாது. ஆனால் அரை மணி நேரம் முகத்தில் இருக்க வேண்டும் அதன் பிறகு சுத்தமான தண்ணீர் கொண்டு முகத்தை அலம்பிய பிறகு துடைத்து விடுங்கள் போதும்.
இந்த சீரத்தை நாம் தினமுமே கூட பயன்படுத்தலாம் அல்லது வாரத்தில் இரண்டு நாட்கள் பயன்படுத்தினாலும் போதும். வெயிலினால் ஏற்படக் கூடிய கருத்திட்டு இதை போட்ட உடனே சரியாகி விடும். நாள்பட்ட கருந்திட்டுகள் இதை தொடர்ந்து பயன்படுத்தி வரும் போது மறைய தொடங்கி முகம் பொலிவாக விடும்.
