முகம் ஜொலிக்க :
இந்த குறிப்புக்கு நாம் பயன்படுத்த போகும் பொருள் மஞ்சள் பூசணி. மஞ்சள் நிறத்தில் இருக்கும் இந்த பூசணிக்காயை எடுத்து தோல் சீவி சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கி மிக்ஸி ஜாரில் போட்டு கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி விழுந்துபோல அரைத்துக் கொள்ளுங்கள். ஒரு சிறிய கிண்ணத்தில் கடலை மாவு போட்டு, அதில் அரைத்த இந்த மஞ்சள் பூசணி விழுதை ஊற்றி கலந்தால் ஒரு பேக் உங்களுக்கு கிடைக்கும். இந்த பேக்கோடு தேன் 1 ஸ்பூன், சேர்த்து கலந்து உங்களுடைய முகம், கழுத்து, கை,கால் இப்படி உடலின் எல்லா இடங்களிலும் இதை தடவி மசாஜ் செய்து 15 நிமிடங்கள் கழித்து குளித்து விட்டால் முகம் மட்டுமல்ல, உங்களுடைய உடம்பு முழுவதும் தங்கம் போல பள பளப்பாக ஜொலிக்க தொடங்கி விடும். ஒரு முறை இதை பயன்படுத்தும் போதே இரண்டு மடங்கு நல்ல ரிசல்ட்டை எதிர்பார்க்கலாம்.
உங்களுடைய சருமம் ரொம்பவும் கருத்துப் போய்விட்டது என்றால், இந்த பேக்கோடு நீங்கள் கொஞ்சம் எலுமிச்சம் பழச்சாறு சேர்த்து கலந்தும் உங்களுடைய சருமத்தில் பேக்காக போடலாம். சில பேருக்கு எலுமிச்சை பழச்சாறு ஒத்து வராது என்றால் அதை ஸ்கிப் செய்து கொள்ளவும். சில பேருக்கு கடலை மாவு ஒத்து வராது. அலர்ஜியை கொடுக்கும். அவர்கள் பாசிப்பருப்பு மாவு, மசூர் டால் மாவு, பச்சைபயிறு மாவு போன்ற வேறு ஏதாவது மாவோடு கூட இந்த மஞ்சள் பூசணி விழுதை ஊற்றி கலந்து முகத்தில் பேக்காக போடலாம்.
இது எதுவுமே உங்களுக்கு செட்டாகாதா வெறும் மஞ்சள் பூசணியை விழுதாக அரைத்து அதை எடுத்து அப்படியே முகத்தில் தடவி மசாஜ் செய்து கொண்டாலும் நல்ல ரிசல்ட் நிச்சயமாக கிடைக்கும். வாரத்தில் ஒருமுறை அல்ல. இரண்டு முறை அல்ல தினம் தோறும் இந்த மஞ்சள் பூசணிக்காயை நீங்கள் சருமத்தில் போடலாம். எந்த பக்கம் விளைவுகளும் ஏற்படாது. முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் முகப்பரு மங்கு போன்ற பிரச்சனைகள் எல்லாம் படிப்படியாக குறையவும் செய்யும்.