• Sun. Mar 26th, 2023

அழகு குறிப்பு

Byகாயத்ரி

Jul 16, 2022

கை நகங்களை அழகாக வைக்க

*இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை அதிகப்படியாக வளர்ந்திருக்கும் நகங்களை நறுக்கிவிடலாம்.

*நகங்களின் நுனிப்பகுதிகளை முழுவதுமாக வெட்டக் கூடாது. அவ்வாறு வெட்டினால் நகத்தை மூடி சதை வளர்ந்து அதிக வலியினை ஏற்படுத்தும். நகத்தினை பற்களால் கடிக்கக்கூடாது. இதனால் நகங்கள் உடைந்துபோக வாய்ப்பு அதிகம். நகம்வெட்டும் கருவியினால் மட்டுமே வெட்டவேண்டும்.

*சாப்பிட்ட பின்னர் கைகளை கழுவும்போது நகங்களையும் சுத்தம் செய்ய வேண்டும். நகங்களின் இடுக்குகளில் தங்கும் நுண்ணுயிரிகளால் வயிற்றுத்தொல்லை, வலி, வாந்தி, வயிற்றுப் போக்கு ஆகியவை உண்டாகும்.

*நகங்கள் அழகுடன் திகழ, காய், கனிகள் நிறைய உட்கொள்ள வே ண்டும். இரவில் குளிர்ந்த நீரினால் கை மற்றும் கால் நகங்களை சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும்.

*சருமத்திற்கு பயன்படுத்தும் எண்ணெய்யை நகங்களிலும் தடவலாம். இதுநகங்களின் மேற்பு ற செல்கள் பாதிக்கப்படுவதை தடுத்து நகங்களை மிருதுவாக வைத்திருக்கும்.

*சமையலறை, தோட்டங்கள், கழிவறைகளில் பிளீச் சிங் பவுடர், அம்மோனியா மற்றும் ரசாயனப் பொருட்க ளைப்பயன்படுத்தவேண்டிய அவசியம் ஏற்படும்போது கண்டிப்பாக கைகளில் உறைகள் அணிந்திருந்தால் நகங்களைப் பாதுகாக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *