• Mon. Dec 11th, 2023

அழகு குறிப்புகள்:

Byவிஷா

Mar 13, 2022

முகத்தை பளிச்சென்று மாற்ற பேஷியல்

செய்முறை: முதலில் நமது முகத்தை கிளன்சிங் செய்ய வேண்டும். அதாவது நமது முகத்தில் படிந்திருக்கும் அழுக்குகளை நீக்க வேண்டும். அதற்கு மற்ற க்ரீம்களை பயன்படுத்துவதை விட, அதே அளவு ரிசல்ட் தரக்கூடிய ஒரு பொருள் நம் அன்றாட வாழ்வில் தினமும் பயன்படுத்தக்கூடிய பால் ஆகும். எனவே தான் 2 ஸ்பூன் பால் ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் பாலை கொஞ்சம் கொஞ்சமாக தொட்டு முகத்தில் தடவி, மசாஜ் செய்து, அழுக்குகள் படிந்து இருக்கும் இடங்களில் நன்றாக அழுத்தம் கொடுத்து தேய்த்து விட வேண்டும். பின்னர் ஒரு துணியை வைத்து முகத்தைத் துடைக்க வேண்டும். பிறகு அதே கிண்ணத்தில் இரண்டு ஸ்பூன் பால் எடுத்துக் கொண்டு, அதனுடன் 1 ஸ்பூன் அரிசி மாவை சேர்த்து நன்றாக கரைத்துக் கொள்ள வேண்டும். பிறகு இதனை முகத்தில் தடவி 5 லிருந்து 10 நிமிடம் நன்றாக மசாஜ் செய்ய வேண்டும். இதனை செய்து முடித்த பிறகு முகத்தில் இருக்கும் துவாரங்கள் அனைத்தும் திறந்திருக்கும். எனவே இவற்றை சமன் செய்வதற்கு சுடு தண்ணீரை வைத்து நன்றாக ஆவி பிடிக்க வேண்டும். இல்லை எனில் ஒரு துண்டை சுடுதண்ணீரில் நனைத்து முகத்தில் ஒற்றி எடுக்க வேண்டும். பின்னர் ஒரு சிறிய பீட்ரூட்டை எடுத்துக் கொண்டு, அதனை நன்றாக துருவிக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு வடிகட்டியில் வைத்து அதன் சாரை மட்டும் வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு அதனுடன் 1 ஸ்பூன் கடலை மாவை சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும். பின்னர் இந்த கலவையை முகத்தில் பேக் போன்று தடவிக் கொள்ள வேண்டும். சிறிது நேரத்தில் இவை நன்றாக காய்ந்து முகம் இறுக ஆரம்பிக்கும். பின்னர் இவை முழுவதுமாக காய்ந்ததும் முகத்தை குளிர்ந்த தண்ணீரில் கழுவி விடவேண்டும். பிறகு உங்கள் முகத்தை கண்ணாடியில் பாருங்கள். பெரிதாக எதுவும் செலவு செய்யாமலேயே உங்கள் முகம் பளிச்சென்று மாறி இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *