• Wed. Nov 19th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

உணவைத் தேடி சாலையில் நடமாடும் கரடிகள்…

Byமகா

Aug 16, 2022

நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதிகளில் கடந்த நாட்களாக கனமழை பெய்து முதுமலை வனப்பதி முழுவதும் பசுமைக்கு திரும்பி உள்ளது.

இந்த நிலையில் சாலை ஓரங்களில் யானைகள் மான்கள் போன்ற வனவிலங்குகள் அதிகமாக நடமாடி வரும் சூழ்நிலையில் கரடிகளும் அதிக அளவில் நடமாடி வருகிறது. குறிப்பாக தேன் சீசன் மற்றும் சாலை மண்ணிற்கு அடியில் உள்ள கரையான்களை உண்பதற்காக அதிக அளவில் கரடிகள் சாலை ஓரங்களில் நடமாடி வருகிறது. சில இடங்களில் கரையான் புற்றுக்களை கரடிகள் உணவுக்காக மண்ணைத் தோண்டி வரும் சூழ்நிலையில் குறிப்பாக முதுமலை தெப்பக் காட்டில் இருந்து மசினகுடி செல்லும் சாலையில் இருசக்கர வாகனத்தில் செல்பவர்களை கரடிகள் தாக்கக்கூடும் என்பதால் எச்சரிக்கையோடு செல்ல வேண்டுமென வனத்துறை என அறிவுறுத்தி உள்ளனர்.