

நாகர்கோவில் பள்ளி அருகில், நாம் தமிழர் கட்சியினரால் வைக்கப்பட்ட பேனர் காற்றில் அசைந்தாடுவதால், விபத்து ஏற்படும் முன் நடவடிக்கை எடுக்கப்படுமா? என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
நாகர்கோவிலில் கடந்த 14ம் தேதி மாலை நாகர்கோவில் நாகராஜா கோவில் திடலில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டத்தின் விளம்பர பேனர்கள் நாகர்கோவில் நகர பகுதிகளில் சுற்றி, சுற்றி ஏராளமாக வைக்கப்பட்டிருந்தது. பானர்கள் வைக்க காவல்துறை அனுமதி கொடுத்திருந்தாலும் ஒரு கட்டுப்பாட்டு அனுமதியுடன் தான். குறிப்பாக பொதுக்கூட்டம் முடிந்த உடன் பானர்களை அகற்றி விட வேண்டும் என்ற உறுதியுடன். நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டம் முடிந்து இரண்டு நாட்கள் கடந்து விட்டது., நாகர்கோவிலின் முக்கிய பிரதான பகுதிகளில் பானர்கள் அகற்றப்படாமல் அப்படியே உள்ள நிலையில், நாகர்கோவிலில் புகழ்பெற்ற புனித ஜேசப் கான்வென்ட் பகுதியில் அகற்றப்படாமல் இருக்கும் பானர் காற்றின் வேகத்தில் அசைந்தாடுவது எவர் மீதும் விழுந்து காயம் ஏற்படுத்தும் முன்பு அகற்ற வேண்டும் என சம்பந்தப்பட்ட பள்ளிக்கு குழந்தைகளை அழைத்து வரும் பெற்றோர்கள் தெரிவித்தனர். காற்றில் அசைந்தாடும் பானர் உட்பட அனைத்து நாம் தமிழர் கட்சி பானர்களை அகற்ற காவல்துறை நடவடிக்கை எடுக்குமா.?