
மதுரை பைபாஸ் சாலையில், வாலிபர் ஒருவர் பிரீத்அனலைசர் கருவியே முடங்கும் அளவிற்கு குடித்து விட்டு வாகனம் ஓட்டியதோடு மட்டுமல்லாமல், முன்னாள் சென்று கொண்டிருந்த வாகனங்களின் மீது மோதியிருப்பது அங்குள்ளவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.
மதுரை பைபாஸ் சாலை போடி லைன் மேம்பாலத்தில் மது போதையில் இரு சக்கர வாகனத்தில் ஒருவர் வந்து கொண்டிருந்தார். அப்பொழுது உச்சி வெயில் மண்டையை தொட போதை தலைக்கேறி கிறுகிறுவென வரவே முன்னாள் செல்லக்கூடிய வாகனம் கூட தெரியாத அளவிற்கு முன்னாள் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனத்தின் மீது வேகமாக மோதி, பின் அருகே சென்ற கார் மீது மோதி வாகனத்தை நிறுத்தினார்.
போதை வாலிபர் முன்னாள் சென்ற இரு சக்கர வாகனத்தில் மோதியதில் அவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. அப்பொழுது பாதுகாப்பு பணியில் இருந்த போக்குவரத்து போலீசார் அந்த நபரை மடக்கி பிடித்து, அவர் மது அருந்தியிருக்கிறாரை என்பதைக் கண்டறியும் பிரித் அனலைசர் கருவியை கொண்டு வரச் சொல்லி பிரீத் அனலைசர் மூலமாக ஊத சொல்லியிருக்கிறார். அந்த போதை வாலிபரோ, ஊத மறுத்து வைத்து பிரித்அனலைசர் கருவியை, சரி பிபி போல பயன்படுத்தினார். இதனால் கோபம் அடைந்த போலீசார் அந்த வாலிபரைத் திட்ட, ஏன் சார் என்ன கொடுமை படுத்துறீங்க என மது போதையில் இருந்தவர் கேட்க இந்த நாள் அங்கு சிறிது நேரம் சிரிப்பு அலை ஏற்பட்டது.
பின்னர் அந்தக் கருவியில் அளவை கணக்கீடு செய்தனர். அப்பொழுது பிரதீப் அனலைசர் காணாத அளவு சுமார் 315 க்கு மேல் மதுபோதையில் இருந்தது போலீசாரை அதிரச் செய்தது. பிரீத் அனலைசரே முடங்கக்கூடிய அளவிற்கு மூக்கு முட்ட குடித்துவிட்டு இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்து லைசன்ஸ் இல்லாமல் விபத்தை ஏற்படுத்திய அந்த போதை வாலிபர் மீது, போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்ததுடன், விபத்து குறித்து திடீர் நகர் போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

