மாற்றுத்திறனாளிகளுக்கு வங்கிக் கடன் மேளா நடத்த தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழக அரசு மாற்றுத் திறனாளிகளுக்கான பல்வேறு நலத்திட்ட உதவிகளை தொடர்ந்து வழங்கி வருகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை பெறுவதற்கான பதிவு செய்யும் சிறப்பு முகாம் , மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு வேலைவாய்ப்பு ஆகியவை தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. அதேபோல் மாத உதவித்தொகையும் தொடர்ந்து அளிக்கப்படுகிறது.
அத்துடன் மாற்றுதிறனாளிகள் சுயதொழில் மூலம் வாழ்க்கை மேம்பாடு அடைய சுய தொழில் வங்கி கடன் வழங்க பரிந்துரை முகாம் மாற்றுத்திறனாளிகளுக்கான வாழ்க்கை மேம்பாடு சேவை மையத்தில் கடந்த 10ஆம் தேதி நடைபெற்றது. இதில் 25 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை வங்கிகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டது.
இந்நிலையில் தமிழ்நாடு முழுவதும் மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதரத்தை மேம்படுத்த திட்டமிட்டுள்ள தமிழ்நாடு அரசு அனைத்து மாவட்டங்களிலும் வங்கிக்கடன் மேளா நடத்த உத்தரவிட்டுள்ளது. சுயதொழில் செய்ய ஊக்குவிக்கும் வகையில் வங்கி கடன் மேளா நடத்த அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மாற்றுத் திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு திட்டம், வங்கிகடன், சுய தொழில் புரிவது ஆகியவற்றை ஊக்குவிக்கும் வகையில் வங்கி கடன் மேளா நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.