• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

நாளை வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்

ByA.Tamilselvan

Nov 18, 2022

வங்கிகளில் ஒப்பந்த அடிப்படையில், வெளியில் இருந்து அவுட்சோர்சிங் முறையில் பணியாளர்களை எடுத்து பணியில் அமர்த்துவதை கண்டித்து வங்கி ஊழியர்கள் நாளை (19-ந்தேதி) நாடு முழுவதும் போராட்டம் நடத்த உள்ளனர்.
அகில இந்திய வங்கிப் பணியாளர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் வெங்கடாசலம் கூறியதாவது:- அவுட் சோர்சிங் மூலம் பணியாளர்கள் பணியமர்த்தப்படுவதால் வாடிக்கையாளர்களின் பணத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும். மேலும் கீழ்நிலை பணியாளர்கள் நியமனத்துக்கான வாய்ப்பையும் குறைக்கும்.
சில வங்கிகள் தொழிலக சச்சரவுகள் திருத்த சட்டத்தின் விதிகளை மீறி செயல்படுகின்றன. பணியாளர்களை கட்டாயமாக பணியிட மாற்றம் செய்கின்றன. சில வங்கிகளின் தன்னிச்சையான முடிவுகளால் இரு தரப்பு ஒப்பந்தத்தின் விதிமுறைகள் மீறப்படுவதோடு பணி மற்றும் பணிப் பாதுகாப்பில் தாக்குதல் நடத்தப்படுகிறது. பழிவாங்கும் முயற்சிகளும் மேற்கொள்ளப்படுகின்றன. இதனை வெளிப்படுத்த போராட்டம் மற்றும் வேலை நிறுத்த நடவடிக்கைகளை தவிர வேறு வழி இல்லை. இவ்வாறு அவர் கூறினார். பணம் செலுத்துதல், பணம் எடுத்தல், காசோலை பரிவர்த்தனை உள்ளிட்ட வங்கிக் சேவைகளில் சிறிய அளவில் பாதிப்பு இருக்கலாம் என்று சில வங்கிகள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு ஏற்கனவே அறிவுறுத்தி உள்ளன.