• Thu. Feb 13th, 2025

மண் குவாரியால் வாழை விவசாயம் பாதிப்பு;தேனி விவசாயிகள் குற்றச்சாட்டு

ByJeisriRam

Apr 15, 2024

அரசு விதிமுறைகளை மீறி விவசாய நிலங்களில் செயல்படும் மண் குவாரியால் வாழை விவசாயம் கடுமையாக பாதிக்கப்படுவதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

தேனி மாவட்டம், உத்தமபாளையம் தாலுகா, வேப்பம்பட்டி ஊராட்சியில், அரசு விதிமுறைகளை மீறி செயல்பட்டு வரும் மண் குவாரியால் அருகே உள்ள விவசாய நிலங்களில் சாகுபடி செய்யப்பட்டுள்ள வாழை முற்றிலுமாக சேதமடைந்து வருவதாக விவசாயி குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.வேப்பம்பட்டி அருகே உள்ள சீலையம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பாலாஜி என்பவர் வேப்பம்பட்டி ஊராட்சி பகுதியில் உள்ள விவசாயங்களில் சுமார் 3,500 வாளை விவசாயம் செய்துள்ளார்.

வேப்பம்பட்டி ஊராட்சியை சேர்ந்த பெத்தனன் என்பவர் தன்னுடைய விவசாய நிலத்தில் அரசு விதிமுறைகளை மீறி மண் குவாரி அமைத்துள்ளார்.இந்த குவாரியில் தினந்தோறும் நூற்றுக்கணக்கான டிப்பர் லாரிகளில் ஹிட்டாச்சி, ஜேசிபி, உள்ளிட்ட கனரக வாகனங்களில் மண் எடுக்கப்பட்டு பல்வேறு இடங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது.குறிப்பாக மண் குவாரியிலிருந்து வெளியேறி வரும், தூசுக்கள், மாசுக்கள், கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்காமல் செயல்பட்டு வருகிறது.

இதனால் அருகே உள்ள வாழை விவசாயம் முற்றிலும் பாதிக்கப்பட்டு வருவதாக விவசாயி குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.உரிய நடவடிக்கை எடுக்க கோரி காவல்துறையினர் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் தெரிவித்தாலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.எனவே மாவட்ட நிர்வாகம் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், வருவாய் துறை வினர், வேளாண்மை துறையினர், வனத்துறையினர், கனிமவளத் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயி கோரிக்கை விடுத்துள்ளார்.