• Wed. Mar 18th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

பெட்ரோல், டீசலை கேன்களில் கொடுக்க தடை…

Byகாயத்ரி

Sep 24, 2022

கோவை, திண்டுக்கல், சென்னை என பல இடங்களில் பாஜக நிர்வாகிகள், இந்து அமைப்பினர் இடங்களில் அடுத்தடுத்து பெட்ரோல் குண்டுவீச்சு தாக்குதல் நடைபெற்றதால் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது. இதையடுத்து 2000க்கு மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும், பெட்ரோல் குண்டு வீச்சு, கார் எரிப்பு சம்பவங்கள் தொடர்பாக காணொலி மூலம் கோவை ஐ.ஜி.சுதாகர், ஆட்சியர், ஆணையருடன் ஆலோசனை நடத்திய இறையன்பு, பிரச்சனையை சுமூகமாக தீர்க்க உத்தரவிட்டுள்ளார்.இவ்வாறு அடுத்தடுத்து பெட்ரோல் குண்டு வீச்சு, கார் எரிப்பு சம்பவங்கள் நடைபெற்று வரும் நிலையில், பெட்ரோல், டீசலை கேன்களில் கொடுக்கக் கூடாது என்று பெட்ரோல் பங்க்குகளுக்கு உத்தரவு பறந்திருக்கிறது. பெட்ரோல், டீசலை பாட்டில்கள், கேன்களில் எடுத்து வருகிறார்களா என சோதனை சாவடிகளில் போலீசார் கண்காணிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், சென்ட்ரல் ரயில் நிலையம் உள்ளிட்ட இடங்களிலும் போலீசார் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர்.