• Wed. Jun 3rd, 2026
WhatsAppImage2026-05-28at214307
previous arrow
next arrow
Read Now

ரயிலில் பட்டாசு எடுத்து செல்ல தடை… ரயில்வே அதிகாரிகள் உத்தரவு…

Byகாயத்ரி

Sep 23, 2022

தீபாவளி நெருங்கி வரும் நிலையில் வியாபாரிகள், ரயில் பயணிகள் பட்டாசுகளை ரயிலில் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ரயில் நிலையங்களில் பட்டாசு எடுத்துச் செல்வது குறித்து கண்காணிப்புகள் தீவிரப்படுத்தப்படும் என்றும் விதிகளை மீறி எடுத்துச் சென்றால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ரயில்வே நிர்வாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ரயில்களில் பட்டாசு எடுத்து சென்றால் ஆயிரம் ரூபாய் அல்லது ஆறு மாத சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் இதுபோன்ற விதிமீறல் தொடர்ந்து ஈடுபட்டால் மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் ரயில்வே பாதுகாப்பு படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் மெட்டல் டிடெக்டர் உதவியுடன் ரயிலில் பட்டாசு எடுத்துச் செல்வது குறித்து கண்காணிக்கப்படும் என்றும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.