• Sun. Dec 7th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

ஊர்வலம், ஆர்பாட்டம் நடித்த மதுரையில் தடை..!!

Byகாயத்ரி

Aug 15, 2022

மதுரையில் அடுத்த 15 நாட்களுக்கு ஆர்ப்பாட்டங்கள் ஊர்வலங்கள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மதுரை மாநகர காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் மதுரை நகரில் உள்ள சாலைகளிலும், எந்த ஒரு தெருவிலும், பொது இடங்களிலும் இன்று முதல் வரும் 29ஆம் தேதி வரை அனைத்து கட்சிக் கூட்டங்கள், ஊர்வலங்கள், ஆர்ப்பாட்டங்கள் போன்றவை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுரையில் சமீபத்தில் தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல்ராஜன் கார் மீது பாஜகவினர் செருப்பு வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் மதுரையில் அடுத்த 15 நாட்களுக்கு ஆர்ப்பாட்டங்கள் ஊர்வலம் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.