இஸ்லாமிய பிரச்சாரப் பேரவை சார்பாக இன்று காலை 7 மணி அளவில் கோவை கரும்புக்கடை சாரமேடு ஷாஜி துணிக்கடை அருகில் பக்ரீத் பெருநாள் தொழுகை சிறப்பாக நடைபெற்றது. இதில் ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் கலந்து கொண்டு சிறப்பு தொழுகை ஈடுபட்டனர்.
தொழுகை முடிந்த பின்னர் ஒருவருக்கொருவர் கை கொடுத்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இதில் மாநில பொருளாளர் உமர் அவர்கள், கோவை செய்து, மாநில பிரதிநிதி சாதிக் அலி, மாநில செயற்குழு உறுப்பினர் அகமது கபீர்,மாவட்டத் தலைவர் சர்புதீன், மாவட்ட செயலாளர் முஜீப் ரஹ்மான், மாவட்ட பொருளாளர் சிராஜுதீன், மாவட்டத் துணைத் தலைவர் நூர்தின், மாவட்டத் துணைச் செயலாளர்கள் அசாருதீன், பைசல் ரகுமான், ஆஷிக் அகமது, அபு, சமூக நீதி மாணவர்களுக்கு மாநில செயலாளர் அம்ஜத் அலி கான்,மற்றும் இஸ்லாமிய பிரச்சார பேரவை நிர்வாகிகள் யாசர், திப்பு சுல்தான்,TMS அப்பாஸ் மற்றும் கிளை கழக நிர்வாகிகள் பொதுமக்கள் ஜமாத்தார்கள் என ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தொழுகையில் கலந்து கொண்டனர்.
