கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே சின்னந்தையான்விளை ஊர் கோவிலில் சுவர் கட்டியதை பொறுக்க முடியாமல் சிலர் 32 க்கும் மேற்பட்ட கூலிப்படையினர் உடன் வந்து நள்ளிரவில் கோவிலில் ஊர்களிலும் பெட்ரோல் குண்டுகள் வீசி அருவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் பல கட்டடங்களையும் கோயில்களையும் சேதப்படுத்தி சென்ற சம்பவத்தில் சுசீந்திரம் போலீசார் முறையாக வழக்குப்பதிவு செய்யாமல் அவர்களுக்கு ஜாமீன் கிடைக்கும் வகையில் வழக்கு பதிவு செய்துள்ள சம்பவத்தை கண்டித்து ஊர் மக்கள் திரண்டு இன்று நாகர்கோவிலில் எஸ்பி அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பெரும் பரபரப்பு. எதிரிகள் தாக்கும் சம்பவம் நடந்த சி.சி.டி.வி, காட்சிகள் வெளியிட்டனர்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்து மணிக்கட்டில் பொட்டல் அருகே உள்ள சின்னந்தையான்விளை ஊரில் 300 க்கும் மேற்பட்ட குடும்பத்தார் வசித்து வருகின்றனர். ஊரில் பிச்சை காலன் சுவாமி கோவில் உள்ளது இந்த கோவிலில் திருப்பணிகள் நடைபெற்று வருகிறது. அதில் கோயில் நிலத்தில் தடுப்புச்சுவர் கட்டியுள்ளனர் கோயில் நிலத்தில் தடுப்பு சுவர் கட்டும் ஊர் மக்களின் நடவடிக்கை பிடிக்காமல் அத்துமீறி 32 கூலிப்படைகள் பெட்ரோல் குண்டு அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களுடன் வந்து நள்ளிரவில் ஊரில் கோவில் விளக்குகள் பல்வேறு கட்டிடங்களை அடித்து சேதப்படுத்தி சென்றனர் இது சம்பந்தமாக சுசீந்திரம் காவல் நிலையத்தில் ஊர் மக்கள் புகார் கொடுத்தனர் ஆனால் போலீசார் முறையாக புகாரை விசாரிக்காமல் கூலி படையினருக்கு ஆதரவாக எளிதில் ஜாமினில் வரக்கூடிய வழக்கு பதிவு செய்து பெட்ரோல் குண்டு வீசிய போன்ற பயங்கர ஆயுதங்களை வழக்குப்பதிவு கொண்டுவராமல் அவர்களுக்கு உதவி புரிந்ததாக கூறி நாகர்கோவிலில் எஸ்பிஐ அலுவலகத்தை இன்று சின்னந்தையான்விளை ஊர் மக்கள் முற்றுகை ஈட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. எதிரிகள் தாக்கும் சம்பவம் நடந்த சி.சி.டி.வி, காட்சிகள் வெளியிட்டனர்.